தனுஷ், சிம்பு பட நடிகையா இது! ஆள் அடையாளமே தெரியாம, அவரோட தற்போதைய நிலையை பார்த்தீர்களா!!

தனுஷ், சிம்பு பட நடிகையா இது! ஆள் அடையாளமே தெரியாம, அவரோட தற்போதைய நிலையை பார்த்தீர்களா!!


actress-richa-pregnant-photo-viral-XSTETU

கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளிவந்த லீடர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இவர் தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி, ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற மயக்கம் என்ன என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த  படத்தில் வலிமையான அவரது நடிப்பு பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து ரிச்சா சிம்புக்கு ஜோடியாக ஒஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படமும் நன்கு ஹிட்டானது. பின்னர் தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்த அவர் ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். 

Richa

இந்நிலையில் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அவர் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். மேலும் அவர் அடுத்த மாதம் குழந்தை பிறந்துவிடும் தன்னால் காத்திருக்க முடியவில்லை எனவும் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ரிச்சா நன்கு உடல் எடை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் கர்ப்பமாக இருக்கும் அவருக்கு வாழ்த்து கூறியும் வருகின்றனர்.