சினிமா

அட.. மயக்கம் என்ன பட ஹீரோயினா இது! அவரது தற்போதைய நிலையைப் பார்த்தீர்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!!

Summary:

தெலுங்கில் 2010ல் வெளிவந்த லீடர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக

தெலுங்கில் 2010ல் வெளிவந்த லீடர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இவர் தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி, ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்த மயக்கம் என்ன என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த  படத்தில் அவர் நடித்த யாமினி என்ற வலிமையான  கதாபாத்திரம் ரசிகர்களால் பெருமளவில் பாராட்டப்பட்டது. திரைப்பிரபலங்கள் பலரும் அவரை புகழ்ந்தனர். 

அதனைத்தொடர்ந்து ரிச்சா சிம்புக்கு ஜோடியாக ஒஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்த அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு ஜோ லாங்கெல்லா என்பவருடன் காதல் ஏற்பட்ட நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 இந்த நிலையில் நடிகை ரிச்சா தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் குட்டி லாங்கெல்லா வரும் ஜூன் மாதம் வருவார் என தெரிவித்து கர்ப்பகால போட்டோசூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Advertisement