நீர் மாசுபாட்டை தடுக்க உயிரை பணயம் வைத்து நீருக்கு அடியில் போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகை!

நீர் மாசுபாட்டை தடுக்க உயிரை பணயம் வைத்து நீருக்கு அடியில் போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகை!


actress rashmika mandahana had photo shoot for water pollution

கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தண்ணா நீர் மாசுபாடு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க நீருக்கு அடியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் இயற்கை வளங்கள் மக்களின் செயல்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக இந்தியாவில் டெல்லி, பெங்களூர், மும்பை, சென்னை போன்ற நகரங்களில் நீர் மற்றும் காற்று மாசுபாடு மிகவும் அதிகமாக உள்ளது. மனிதகுலம் நோயின்றி வாழ்வதற்கு தூய்மையான நீர் மிகவும் அவசியமான ஒன்று. அதை உணர்த்தும் வண்ணமாக தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தண்ணா ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

actress rashmika mandhana

பெங்களூரில் உள்ள பெலந்தூர் ஏரியானது மக்களால் பெரிதும் மாசு படுத்தப்பட்டுள்ளது. இந்த நீர் மாசுபாடு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ராஷ்மிகா அந்த அசுத்தமான ஏரியின் அடியில் இறங்கி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அசுத்தமான நீரில் இறங்குவதால் தமக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாத 22 வயதான அந்த நடிகை நீர் மாசுபாடு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எனது குறிக்கோள் என கூறியுள்ளார். 

actress rashmika mandhana

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த நடிகை "நீர் மாசு படுவதை பார்த்து என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை; எனது இதயம் வலிக்கிறது. இதேநிலைமை நீடித்தால் இன்னும் சில காலங்களில் என்னவாகும் என்பதை நினைத்து பயமாக இருக்கிறது. எனவேதான் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த போட்டோ ஷூட் நடத்தினேன்" என பதிவிட்டுள்ளார்.