"கியூட்டான செல்பிக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட்டுக்களை கொள்ளையிட்ட நடிகை ராசி கன்னா!"

தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா நடித்த "இமைக்கா நொடிகள்" படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் ராஷி கன்னா. தொடர்ந்து அயோக்கியா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து வரும் இவர், "மெட்ராஸ் கபே" என்ற ஹிந்திப் படத்தில் ஒரு துணைக் கதாப்பாத்திரத்தில் தான் முதலில் அறிமுகமானார். இதையடுத்து "மனம்" என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். இதையடுத்து 2017ம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமானார்.
இப்படத்தில் மோகன்லால் மற்றும் விஷாலுடன் ராஷி கன்னா நடித்திருந்தார். இப்படத்தை உன்னி கிருஷ்ணன் இயக்கியிருந்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் ராஷி கன்னா, சில வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது இவர் தனது காரில் அமர்ந்தபடி சில செல்பீக்களை எடுத்து, அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் உள்ள அந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஏராளமான ஹார்ட்டீன்களை அள்ளி விட்டு வருகின்றனர்.