ராமன் தேடிய சீதையாக மாறிய ரம்யா நம்பீசன்.. கலக்கல் போட்டோவால் கண்குளிரும் ரசிகர்கள்.!

ராமன் தேடிய சீதையாக மாறிய ரம்யா நம்பீசன்.. கலக்கல் போட்டோவால் கண்குளிரும் ரசிகர்கள்.!



Actress Ramya nambeesan recent photo viral

 

ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா நம்பீசன். இவர் தமிழில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்து வந்தார்.

அத்துடன் ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், குள்ளநரி கூட்டம், இளைஞன், பீசா, டமால் டுமீல், சைத்தான், சேதுபதி, சத்யா உட்பட பல்வேறு படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார். 

கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த சேதுபதி திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து, தமிழ் மக்கள் மற்றும் இளைஞர்களின் மனதை கவர்ந்திருந்தார். இவர் எப்போதாவது தனது அழகிய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது சமூகவலைத்தளத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.