கொளுத்தும் வெயிலுக்கு இந்த கெட்டப் சூப்பர்... நடிகை ராய் லட்சுமியின் வைரல் புகைப்படம்!

நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படம்.


actress-raailaxmi-latest-photo-JT2RBS

நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படம்.

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்த இவர் தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். ஒருசில படங்களுக்கு பிறகு சரியான வாய்ப்பு அமையாததால் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றினார்.

அதன்பின்னர் அரண்மனை, மங்காத்தா போன்ற படங்களில் நடித்த இவர் ஹிந்தி சினிமா பக்கம் சென்றார். அங்கு அவர் நடித்த ஜூலி திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் இவரது நடிப்பில் நீயா 2 திரைப்படம் தமிழில் வெளியானது. அந்தப் படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இதனை அடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் ஒருசில படங்களில் நடித்துவருகிறார் ராய் லட்சுமி. மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்த வகையில் கவர்ச்சியை எப்பொழுதும் தாறு மாறாக காட்டும் ராய் இன்று முழுசா எல்லாத்தையும் கவர் பண்ணி தலையில் துப்பட்டா போட்டப்படி உள்ள புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி கமெண்ட்களை பெற்று வருகிறது.