சினிமா

அந்த இடத்தில் டாட்டூ குத்தி, அப்பட்டமாக காட்டிய நெஞ்சிருக்கும் வரை நாயகி! அதுவும் எதை பார்த்தீர்களா! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

நெஞ்சிருக்கும் வரை நடிகை பூனம் கவுர் தனது மார்பு பகுதியில் திரிசூலத்தை பச்சை குத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம் நெஞ்சிருக்கும் வரை. தற்போதுவரை அந்த படம் ரசிகர்களால் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை பூனம் கவுர்.  

அதனைத் தொடர்ந்து அவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த உன்னைப்போல் ஒருவன், வெடி படத்தில் விஷாலுக்கு தங்கையாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சினிமாக்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவந்த அவர் கவர்ச்சியில் இறங்கி பின்னர்  ஏராளமான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் திரையுலகப் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் டாட்டூ குத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் நிலையில் பூனம் கவுரும் தன்னுடைய மார்புப்பகுதியில் திரிசூலத்தை டாட்டூவாக  குத்திக் கொண்டுள்ளார்.  மேலும் இத்தகைய புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் திரிசூலத்தை இங்கேயா பச்சை குத்துவது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement