இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
ப்பார்றா!! நிவேதா தாமஸ்க்கு இப்படி ஒரு திறமையும் இருக்கா!! பாராட்டு மழையை பொழியும் நெட்டிசன்கள்! வைரல் வீடியோ...

நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் இன்று தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்ணனி நாயகிகளில் ஒருவராக உள்ளார் நிவேதா தாமஸ். சினிமா, சீரியல்களில் குழந்தை நடச்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துவருகிறார்.
கதாநாயகி கதாபாத்திரம் மட்டுமில்லாமல், ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் நிவேதா தாமஸ்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்தவகையில் அவர் தற்போது சூர்யா நடித்த ஜில்லுனு ஒரு காதல் படத்தில் இடம் பெற்ற ‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்...’ என்ற பாடலை பாடி, தானே இசையமைத்து வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.