சோ கியூட்!! ரஜினி, கமலின் ரீல் மகள் சிறுவயதில் எப்படியிருக்காரு பார்த்தீர்களா! கொஞ்சி தீர்க்கும் ரசிகர்கள்!!

சோ கியூட்!! ரஜினி, கமலின் ரீல் மகள் சிறுவயதில் எப்படியிருக்காரு பார்த்தீர்களா! கொஞ்சி தீர்க்கும் ரசிகர்கள்!!


actress-nivetha-thomas-childhood-photo-viral

சின்னத்திரையில் ஒளிபரப்பான மூசா என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நிவேதா தாமஸ். அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்னர் நிவேதா தாமஸ் ஜெய் நடிப்பில் வெளிவந்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆனால் அப்படத்தை தொடர்ந்து  சொல்லிக்கொள்ளும்படி ஹீரோயின் வாய்ப்பு எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து நிவேதா தாமஸ் ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக, பாபநாசம் படத்தில் நடிகர் கமலுக்கு மகளாகவும் , தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாகவும் நடித்துள்ளார். இப்படங்கள் நடிகை நிவேதா தாமஷை தமிழில் பெருமளவில் பிரபலமடைய செய்தது.

ஆனால் அவர் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது பவன் கல்யாணுடன் ‘வக்கால் சாப்’ என்ற படத்திலும் நிக்கில் சித்தார்த்தாவுடன் ‘சுவாஸா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில்  நடிகை நிவேதா தாமஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு. வருகிறார்.

Nivedha thomas

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நிவேதா தாமஸ் சிறுவயதில் தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் செம க்யூட் என அவரை கொஞ்சி வருகின்றனர்.