சினிமா

அமலாபால் கையில் சிகரெட்டு, நிவேதா கையில் சுருட்டு! சர்ச்சையில் சிக்கும் பிரபலங்கள்!

Summary:

Actress nivetha pethuraj smoking photos goes viral

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் கூத்து திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவரது புகழும் தமிழ் சினிமா முழுவதும் பரவியது.

இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒருபடத்திலும், ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்திலும் நடித்திருந்தார் நிவேதா. இந்நிலையில் நடிகை அமலா பால் புகைபிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியதோடு மட்டுமல்லாமல் பலரது கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது. இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைபிடிக்கும் புகைப்படம் ஒன்றும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

கையில் சுருட்டுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருந்தாலும், அமலாபால் கையில் சிகரெட்டுடன் இருந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து நிவேதாவின் புகைப்படமும் வைரலாகி வருகிறது.


Advertisement