சினிமா

அட.. இப்படி மிஸ் பண்ணிட்டாரே! ஐயா, சந்திரமுகி பட வாய்ப்பை ஏற்க மறுத்த பிரபல நடிகை! யாருன்னு பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் கடந்த 2005ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மா

தமிழ் சினிமாவில் கடந்த 2005ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஐயா. இதில் சரத்குமார் மகன் மற்றும் அப்பா என இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார். மேலும் இத்திரைப்படத்தில் ஹீரோயினாக சரத்குமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.

இப்படத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாரா மக்களால் பெருமளவில் கவரப்பட்டார். மேலும் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நயன்தாரா ரஜினி, அஜித், விஜய் என பல பிரபலங்களின் படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

navya nair

ஆனால் முதலில் ஐயா திரைப்படத்தில் நடிக்க இருந்தது மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நவ்யா நாயராம். ஐயா திரைப்படத்தில் நடிக்க அவரை அணுகிய போது நவ்யா நாயர் மலையாளப் படங்களில் பிஸியாக இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டாராம். பின்னர் அவரை பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்திலும் நடிக்க கேட்டபோது அவர் வாய்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவரே பேட்டி ஒன்றிலும் கூறியுள்ளாராம்.


Advertisement