
Actress Nani Audio release..!
பிரபல சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நிலானி. இவர் உதவி இயக்குனர் காந்தி லலித்குமாரை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் இதனை ஏற்று கொள்ள முடியாமல் காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டர்.
இதனை தொடர்ந்து நடிகை நிலானியும் மற்றும் உதவி இயக்குனர் லலித்குமாரும் ஒன்றாக இருந்த சில படுக்கையறை புகைப்படங்கள் வெளியானது. இதனை பார்த்த பலரும் உதவி இயக்குனர் காந்தி லலித்குமாரை காதலித்து வருவதாக கூறி நடிகை நிலானி தான் ஏமாற்றி விட்டார் என கூறிவருகின்றனர்.
செய்தியாளர்களை சந்தித்து நடிகை நிலானி கூறுகையில் நான் லலித்குமாரிடம் ஒரு நல்ல நண்பராக தான் பழகி வந்தேன் என்றும் அந்த லலித்குமாரால் கடந்த மூன்று ஆண்டுகளாக நான் தான் பல கொடுமைகளை அனுபவித்து வந்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இதை எல்லாம் நான் என் குழந்தைகளுக்காக மட்டும் தான் மிகவும் அமைதியாக பொறுத்து கொண்டு இருந்தேன் என்று கூறியுள்ளார். என்னுடைய இந்த நட்பினை லலித்குமார் தான் மிகவும் தவறாக புரிந்து கொண்டார் என கூறியுள்ளார்.
இந்தனை தொடந்து ஒரு ஆடியோ காட்சி ஒன்று இது தொடர்பாக தற்போது வெளியாகி உள்ளது. இந்த ஆடியோ காட்சியை இலங்கையை சேர்ந்த ஒரு ஊடகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.
இதில் உதவி இயக்குனர் காந்தி லலித்குமார் ஒரு சைகோ போல பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த ஆடியோ காட்சிகள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் உள்ளதாம். இந்த ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
நடிகை நிலானியை இத்தனை நாட்களாக தவறாக கூறி வந்த ஊடகங்கள் இந்த உதவி இயக்குனர் காந்தி லலித்குமாரின் ஆடியோ பதிவை கேட்ட பின்பு அவர்களின் மனநிலையை மாற்றும் அளவிற்கு அதிர்ச்சியூட்டும் ஒரு கொடூரமான உரையாடல் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிட தக்கது.
Advertisement
Advertisement