
நடிகை நமீதா முதியோர் இல்லத்திற்கு என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்.
நடிகை நமீதா முதியோர் இல்லத்திற்கு என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்.
தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து அவர் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் அவர் பல படங்களில் தனது அளவில்லாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நடிகை நமீதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்தார்.
பின்னர் நடிகர் வீரேந்திர சவுத்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் மகளிர் தினத்தை முன்னிட்டு அம்பத்தூரில் உள்ள முதியோர் இல்லம் ஓன்று சென்று அவரால் முடிந்த உதவியை செய்து, அங்கு உள்ளவயதானவர்க்ளிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.
மேலும் அங்கு உள்ள அனைவருக்கும் பெட்சீட் கொடுக்கும் வீடியோஒன்றையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த வீடியோ இணையத்தளத்தில் செம வைரலாகி லைக்சை பெற்று வருகிறது.
Advertisement
Advertisement