புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
தேர்தலில் போட்டியா? முக்கிய கட்சியின் செயற்குழு உறுப்பினரான நடிகை நமீதா விளக்கம்!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நமீதா. கவர்ச்சி நடிகையான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நடிகை நமீதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் நடிகர் வீரேந்திர சவுத்ரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகும்பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாஜக கட்சியில் இணைந்த அவருக்கு அண்மையில் செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பாஜக கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை நமிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், முதன்முறையாக ஒரு கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது மிகவும் ஆர்வமாக உள்ளது என கூறியுள்ளார்.
மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேள்வி எழுப்பியதற்கு, நிச்சயமாக பாஜகவிற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன். பிற கட்சிகளை விமர்சிப்பதை விட பாஜக மக்களுக்காக என்னவெல்லாம் செய்துள்ளது என்பதை நன்றாக மக்களுக்கு எடுத்துக் கூறுவேன். பாஜக தமிழகத்தில் வளர்ச்சி பெற என்னால் ஆன முயற்சியை எடுப்பேன் என கூறியுள்ளார்.