"எந்தன் நண்பியே நண்பியே".. தோழிகளுடன் மகிழச்சியாக வீடியோ வெளியிட்ட மீனா..! அவங்க இல்லன்னா மீனா இல்ல..!! 

"எந்தன் நண்பியே நண்பியே".. தோழிகளுடன் மகிழச்சியாக வீடியோ வெளியிட்ட மீனா..! அவங்க இல்லன்னா மீனா இல்ல..!! 


actress-meena-instagram-post-about-her-friends

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருக்கிறார். 

மேலும் தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இறுதியாக இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு கணினி பொறியாளரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Actress meena

கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதியன்று மீனாவின் கணவர் வித்தியாசாகர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதனால் மிகவும் மனமடைந்து போன மீனா கணவர் இறந்து இரண்டு மாதங்களுக்கும் மேலான நிலையிலும், அதிலிருந்து வெளிவராது இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது தோழிகள் ரம்பா, சங்கவி, சங்கீதா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோரும் கொஞ்சம் கொஞ்சமாக மீனாவை அதிலிருந்து வெளிக்கொண்டு வருகின்றனர். 

மீனாவின் 46-வது பிறந்தநாளை முன்னிட்டு இவரது தோழிகள் அனைவரும் குடும்பமாக வந்து நேரில் சந்தித்து மீனாவிற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இதனைக்கண்ட தோழிகள் மட்டும் இல்லையெனில் கண்டிப்பாக இவர் அந்த சோகத்தில் இருந்து வெளிவந்திருக்க முடியாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.