அம்மாவும் பொண்ணும் அம்புட்டு அழகு... நீங்களே பாருங்க! வைரலாகும் புகைப்படங்கள்...



Actress meena daugter photo

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை மீனா. என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அவதாரம் எடுத்த இவர் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.

மேலும் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் மீனா.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த மீனா, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியே இருந்தார். தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது  வழக்கம். அந்த  வகையில் அவர் தற்போது மகளுடன் உள்ள அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.