வேற லெவல் கோலாகலத்துடன் நடைபெற்ற நடிகை மீனாவின் பர்த்டே பார்ட்டி! கலக்கலாக திரண்ட பிரபலங்கள்! தெறிக்கவிடும் புகைப்படங்கள்!!



actress meena birthday party photo viral

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  பிரபலமானவர் நடிகை மீனா. அதனைத் தொடர்ந்து அவர் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். பின்னர் அவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, அஜித் என பல  பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

90'ஸ் காலகட்டங்களில் இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கிய அவர் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அசத்தலாக நடிக்கக் கூடியவர். இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு இடைவெளிவிட்டு இருந்த அவர் தற்போது மீண்டும் பல திரைப்படங்களில் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது மகள் நைனிகாவும் தெறி படத்தில் அசத்தலாக நடித்திருந்தார்.

நடிகை மீனா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அண்மையில் தனது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். 

Actress meena

 அந்த பார்ட்டியில் நடிகை சினேகா, அவரது சகோதரி, நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, பிரீத்தா அவரது சகோதரி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த விழாவில் நடிகை மீனா மட்டும் வேறு நிற உடை அணிந்து இருக்க மற்ற அனைவரும் கருப்பு நிற உடையில் கலக்கலாக வருகை தந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress meenaActress meena