அடுத்த அதிர்ச்சி! சிம்பு பட நடிகையின் கணவர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகத்தினர் இரங்கல்!!

பாலிவுட் நடிகை மந்திரா பேடியின் 49 வயது நிறைந்த கணவர் ராஜ் கெளசல் மாரடைப்பால் உயிரிழந்த சம


actress mantra pedi husband dead by heart attack

பாலிவுட் நடிகை மந்திரா பேடியின் 49 வயது நிறைந்த கணவர் ராஜ் கெளசல் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1995 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மந்திரா பேடி. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை மந்திராபேடி தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மன்மதன், சாஹோ, அடங்காதே ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

மேலும் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றிய அவர் 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி ௧௪, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ராஜ் கெளசல் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு விர் என்ற மகனும் தாரா என்ற மகளும் உள்ளனர். 

mandra pedi

இந்த நிலையில் மந்திரா பேடியின் கணவர் ராஜ் கெளசல் 49 வயதே நிறைந்த நிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை 4.30 மணியளவில் காலமானார். இந்நிலையில் ராஜ் கெளசலின் மறைவு பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.