நடிகை மஞ்சிமா மோகனா இது....! என்ன இப்படி ஆகிட்டாரே..! லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்....

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் மஞ்சிமா மோகன். 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
அச்சம் என்பது மடமையடா என்கிற படத்தை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்னர் சத்ரியன், தேவராட்டம், துக்ளக் தர்பார் என வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் FIR திரைபடத்தில் நடித்து இருக்கிறார். மஞ்சிமா மோகன் தற்போது நடிகர் கௌதம் கார்த்தி உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் இதுவரை தங்கள் காதலை உறுதியாக அறிவிக்கவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் 'கவுதம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர்' என்று மட்டும் மஞ்சிமா மோகன் கூறிஉள்ளார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் இருக்கிறார். இந்நிலையில் அவர் தற்போது சற்று உடல் எடை கூடி கொளுக்கு மொலுக்குனு இருக்கும் நடிகை மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்து ஒல்லியாக இருந்த மஞ்சிமாவா இப்படி மாறிவிட்டார் என அனைவரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
#ManjimaMohan latest pic pic.twitter.com/RUEHdiLsAp
— Siddhu Manchikanti (@SiDManchikanti) March 19, 2022