சினிமா

அட.. இவர்தான் நம்ம கவண் பட நாயகியோட காதலரா?? மிக நெருக்கமாக நடிகை மடோனா வெளியிட்ட புகைப்படம்!!

Summary:

மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ப்ரேமம்

மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ப்ரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் மடோனா செபாஸ்டியன். அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானார். அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மடோனா மீண்டும் விஜய் சேதுபதியுடன் கவண், தனுசுடன் பவர் பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது அவரது கைவசம் தமிழில் கொம்பு வச்ச சிங்கம்டா, கன்னடத்தில் கொட்டிகோபா மற்றும் தெலுங்கில் ஷியாம் சிங்கராய் உள்ளிட்ட படங்கள் உள்ளன. மேலும் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் மடோனா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் இன்று ராபி ஆபிரகாம் என்பவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
ராபி ஆபிரகாம் தமிழில் நேரம் படத்தில் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் இசையமைப்பாளரும் கூட.

இத்தகைய புகைப்படத்தை வெளியிட்ட மடோனா உங்களை சந்தித்து ஏழு வருடமாகிவிட்டது. உங்களை பற்றி அறிந்ததையும் உங்கள் தொடர்பையும் மிகவும் அருமையாக உணர்கிறேன். என்னோடு இணைந்து கொண்டதற்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் இவர்தான் நடிகை மடோனாவின் காதலரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் இருவருக்கும் வாழ்த்துக் கூறியுள்ளனர்.


Advertisement