நான்தான் போய் அவருக்கு ப்ரபோஸ் செய்தேன்.. முதல் காதல் குறித்து ஓபன்னாக உடைத்த நடிகை லட்சுமி மேனன்!!Actress lakshmi menon open talk about first love

தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து கும்கி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். மேலும் சசிகுமாருடன் இணைந்து அவர் நடித்த சுந்தர பாண்டியன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அவரை பெருமளவில் பிரபலமடைய செய்தது. தொடர்ந்து நடிகை லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் நான் சிவப்பு மனிதன், குட்டிப்புலி, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், மிருதன், றெக்க போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் லட்சுமிமேனன் 

மேல் அவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வந்தார். பின்னர் சினிமாவில் பெருமளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் மீண்டும் தனது படிப்பில் கவனத்தை செலுத்தினார். பின் இறுதியாக சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியை சந்தித்தது. தற்போது அவரது கைவசம் சப்தம், கண்ணம்மா போன்ற படங்கள் உள்ளன.

இதையும் படிங்க: அப்படி நடந்திருக்கவே கூடாது.. ஏர்போர்ட்டில் நடந்த மோசமான செயல்.! மன்னிப்பு கேட்ட நடிகர் நாகார்ஜுனா.!

Lakshmi menon

முதல் காதல் 

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் தனது முதல் காதல் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். அப்பொழுது அவர், என்னிடம் யாரும் லவ் ப்ரொபோஸ் செய்யவில்லை. நான் தான் ஒருவரிடம் என் காதலை கூறினேன். ஸ்கூல் படிக்கும் போது எனக்கு ஒருவரை பிடித்திருந்தது. நான் நேரடியாக அவரிடம் சென்று ப்ரொபோஸ் செய்தேன்.

தொடரமுடியாத காதல் 

சில நாட்களில் அவரும் அதனை ஏற்றுக் கொண்டார். நாங்கள் அடிக்கடி பேசிக்கொண்டோம். தொடர்ந்து போனில் பேசினோம். வீட்டில் தெரியக்கூடாது என்பதற்காக போர்வைக்குள் இருந்தெல்லாம் போன் பேசியுள்ளேன். ஆனால் பள்ளி முடிந்து எனக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தது. பின் படிப்பு, என் காதல் எதையும் தொடர முடியவில்லை. சமீபத்தில்தான் அந்த நபருக்கு திருமணம் நடைபெற்றதாக கேள்விப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

 

இதையும் படிங்க: அடுத்த ஹீரோயின்கள் ரெடி.. அம்மாவை போலவே கொள்ளை அழகில் தேவயானி மகள்கள்!! லேட்டஸ்ட் புகைப்படம்!!