அப்படி நடந்திருக்கவே கூடாது.. ஏர்போர்ட்டில் நடந்த மோசமான செயல்.! மன்னிப்பு கேட்ட நடிகர் நாகார்ஜுனா.!Actor nagarjuna abology for airport incident

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. அவர் தற்போது தனுஷுடன் இணைந்து குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த நாகார்ஜுனாவை அங்கு கடை ஒன்றில் பணிபுரியும் முதியவர் ஒருவர் சந்திக்க முயற்சி செய்துள்ளார்.

கீழே விழுந்த நபர் 

அப்பொழுது நாகார்ஜுனாவின் பாதுகாவலர் அவரை தடுத்து பின்னால் இழுத்துள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் தாங்கி பிடித்துக் கொண்டனர். இதனை கண்டுகொள்ளாமல் நாகர்ஜுனா சென்றுள்ளார். மேலும் அவரது பின்னால் தனுஷ் மற்றும் அவரது இளைய மகன் லிங்காவும் பார்த்து கொண்டே சென்றுள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இதையும் படிங்க: அடுத்த ஹீரோயின்கள் ரெடி.. அம்மாவை போலவே கொள்ளை அழகில் தேவயானி மகள்கள்!! லேட்டஸ்ட் புகைப்படம்!!

மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா 

இதனைக் கண்ட நெட்டிசன்கள் மனிதத் தன்மையற்ற செயல், மேலும் கீழே விழுந்தவரை கண்டு கொள்ளாமல் சென்ற நாகார்ஜுனாவை விமர்சனம் செய்தனர். இந்நிலையில் இதுகுறித்து நாகார்ஜுனா எக்ஸ் தளப் பக்கத்தில், இப்பொழுதுதான் இது எனது கவனத்திற்கு வந்தது. இதுபோன்று கண்டிப்பாக நடந்திருக்க கூடாது. அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வருங்காலங்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.