3 ஆண்டுகளாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்த நடிகை லட்சுமி மேனனா இது? லேட்டஸ்ட் வீடியோ.!

3 ஆண்டுகளாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்த நடிகை லட்சுமி மேனனா இது? லேட்டஸ்ட் வீடியோ.!



Actress lakshmi menon latest video goes viral

சுந்தரபாண்டியன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன், கும்கி என இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வர தொடங்கினார் லட்சுமி மேனன்.

முதலில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர் ஒருசில படங்களை அடுத்து சற்று மாடர்னாக நடிக்க தொடங்கினார். வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெக்க என்ற படத்தில் நடித்தார்.

Lakshmi menon

இதனிடையே உடல் எடை கூடி சற்று குண்டாக மாறிய நடிகை லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனை அடுத்து தனது சொந்த ஊருக்கே சென்றுவிட இவர் கடந்த மூன்று வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகை லட்சுமி மேனன்.

படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்ட இவரின் வீடியோ ஓன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் லட்சுமி மேனனை பார்க்கும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.