நடிகை லட்சுமி மேனனா இது... என்ன இப்படி மாறிட்டாரே... வைரலாகும் வீடியோ!!

நடிகை லட்சுமி மேனனா இது... என்ன இப்படி மாறிட்டாரே... வைரலாகும் வீடியோ!!


Actress Lakshmi Menon latest photo viral

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து கும்கி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். அதனை தொடர்ந்து நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், மிருதன், ரெக்க போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து தல அஜித்துடன் இணைந்து வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். பின்னர் உடல் எடை அதிகரிக்கவே சினிமாவில் வாய்ப்பின்றி கிடந்தார். மீண்டும் தனது படிப்பில் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி மேனன் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது உடல் எடை குறைந்து மிக ஸ்லிம்மாக மாறி உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.