சினிமா

வாவ்.. அதே கியூட் சிரிப்பு! நடிகை லைலா இப்போ எப்படி இருக்காரு பார்த்தீர்களா! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

Summary:

வாவ்.. அதே கியூட் சிரிப்பு! நடிகை லைலா இப்போ எப்படி இருக்காரு பார்த்தீர்களா! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை லைலா. அதனை தொடர்ந்து அவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் ஹிட் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் லைலா கண்ணகுழியழகி, சிரிப்பழகி என ரசிகர்களால் புகழப்பட்டார்.

அதனை தொடர்ந்து அவர் 2006-ம் ஆண்டு ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். மேலும் அவருக்கு தற்போது நன்கு வளர்ந்த இருமகன்கள் உள்ளனர். 40 வயது  நிறைந்த அவர் தற்போது சினிமாவில் இருந்து விலகியுள்ளார்.

ஆனாலும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது குளோசப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் இந்த வயசுலயும் அப்படியே இருக்காரே என சொக்கி போயுள்ளனர்.

 


Advertisement