ப்பா!! உடல் எடையை பலமடங்கு குறைத்து 20 வயது இளம் பெண்போல மாறிய குஷ்பு!! வைரல் புகைப்படங்கள் இதோ..

ப்பா!! உடல் எடையை பலமடங்கு குறைத்து 20 வயது இளம் பெண்போல மாறிய குஷ்பு!! வைரல் புகைப்படங்கள் இதோ..


actress-kushbu-fat-to-slim-viral-photos

உடல் எடை குறைந்து பார்க்க மிகவும் ஒல்லியாக மாறியுள்ள நடிகை குஷ்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் குஷ்பு. ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் கொடிகட்டி பரந்த இவர் பிரபல நடிகரும், இயக்குனருமான சுந்தர். சி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

kushbu

தற்போது சினிமா, சீரியல் என பிஸியாக இருக்கும் இவர் முழு நேர அரசியலிலும் ஈடுபட்டுவருகிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக-வுக்கு தாவிய குஸ்பு, கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி சார்பாக சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

தேர்தலுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்திவரும் குஷ்பு, தீவிர உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை பலமடங்கு குறைத்துள்ளார். பார்க்க குண்டாக இருந்த குஷ்பு, தற்போது உடல் எடையை குறைத்து, பார்க்க இளம் பெண் போல் தோற்றமளிக்கிறார். உடல் எடையை குறைத்த சில புகைப்படங்களை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது  அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.