இளமை தோற்றம்! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் நடிகை குஷ்புவின் இளமை கால புகைப்படம்.

ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமா பிரபலங்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை குஷ்பூ. மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு வந்த பிறகு தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை குஷ்பூ பிரபல இயக்குனர் சுந்தர். சி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டுவரும் இவர் தேசிய காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பிலும் உள்ளார். தற்போது சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்திவரும் நடிகை குஷ்பூ சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.
தற்போது 49 வயதாகும் குஷ்பூ இன்றும் அன்று பார்த்ததுபோலவே மிகவும் இளமையுடன் உள்ளார். இந்நிலையில் குஷ்பூ நடிக்க வந்த ஆரம்பகாலத்தில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. தற்போது சற்று உடல் எடை கூடி, சற்று குண்டாக இருக்கும் குஷ்பு இளம் வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்கள்.
புகைப்படம் இதோ.