சினிமா

கொஞ்சம் கூட மேக்கப் இல்லை.. அப்படியே கோவிலுக்கு வந்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படம்..

Summary:

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் கோவிலுக்கு முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் கோவிலுக்கு முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் இன்று பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இந்தியா முழுவதும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சர்க்கார் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் முகம் காட்டாத இவர் அடுத்ததாக ரஜினியின் அண்ணாத்தா படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு, தற்போதில் இருந்தே பண்டிகை உணர்வோடு இருக்கும் கீர்த்தி சுரேஷ் அண்மையில் அலமேலுமங்கபுரம் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு கோவில் முன்பாக நின்று சிரித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

மேலும் அந்த புகைப்படத்தில் அவர் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல், இயற்கை அழகுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகிவருகிறது. என்னதான் கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்து சிக்கென மாறினாலும், பழைய கொளுக்கு மொலுக்கு கீர்த்தி சுரேஷை பார்க்க முடியவில்லையே என ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement