பெண்கள் ஓசி பஸ்ல போறாங்களா?.. ஆண்களும் பெண் வயிற்றில் ஓசியில்தான் பிறந்தாங்க - காட்டத்துடன் நடிகை கஸ்தூரி பேட்டி..!!



Actress kasthuri angry about ponmudi

 

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், "உங்கள் குடும்ப அட்டைக்கு 4000 ரூபாய் கொடுத்தார்கள் அல்லவா அதை வாங்கினீர்களா? இப்பொழுது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றால் கூட ஓசி பஸ்ஸில் தான் செல்கிறீர்கள்" என்று கூறினார். 

அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சுக்கு பல அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் சமூகவலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரியும் கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசிய போது, "பேருந்து பயணம் பெண்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் திட்டம்.

actress kasthuri

பொதுவாக அரசு எந்த திட்டத்தையும் சொந்த பணத்தில் செயல்படுத்துவதில்லை. மக்களின் வரிப்பணத்தில் தான் நிறைவேற்றி வருகின்றனர். மக்களுக்கு ஒரு திட்டத்தை செய்து, அதை சுட்டிக் காட்டுவது மிகப்பெரும் தவறு. அதிலும் "ஓசி பஸ்" என்ற வார்த்தையை அமைச்சர் பொன்முடி பயன்படுத்தியது அதைவிட பெரிய தவறு. 

இதனை அவர் எப்போதும் நியாயப்படுத்த முடியாது. 'ஓசி பஸ்' என்று பெண்களை சொல்லும் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அனைத்து ஆண்களும் பெண்களின் வயிற்றில் ஓசியில் பிறந்தவர்கள் தான். பெண்களுக்கான மரியாதையை கொடுக்க வேண்டும். பெண்களை மதிக்கும் வகையில் தான் அமைச்சர்கள் பேச வேண்டும்" என்று காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.