ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
"தங்கள் அவதியை வெளியிடக் கூட உரிமையில்லையா" கமலஹாசனிற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி..
ஒரு காலத்தில் தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. சமீப காலமாக அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.
இவர் பேசும் கருத்துக்கள் எப்போதும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும். இந்நிலையில் தற்போது உலகநாயகன் கமலஹாசனை விமர்சித்து கஸ்தூரி பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை இன்னும் இயல்புக்கு திரும்பாத நிலையில், அனைவரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் கமல் "மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தான் இப்போதைய தேவை. அரசை குறை கூறுவது அல்ல" என்று கூறியிருந்தார். இதுகுறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், "இது தான் படுத்தே விட்டானய்யா மொமெண்ட்" என்று கமலை விமர்சித்துள்ளார்.
மேலும் அவர், "மக்களுக்கு தம் அவதியை வெளியிடக் கூட உரிமையில்லையா? எல்லோரும் நன்றி சொல்லத்தான் விரும்புவார்கள். யாரும் வேண்டுமென்றே குறை சொல்லவில்லை. ஆனால் அரசு விளம்பரம் செய்த அளவிற்கு அதன் செயல்பாடுகள் இல்லை" என்று கஸ்தூரி கூறியுள்ளார்.