நடிகை காஜல் அகர்வாலுக்கு வழங்கப்பட்ட கௌரவ விருது! என்ன விருதுனு பார்த்தீங்களா...



actress-kajal-aggarwal-award-photo

இயக்குனர் பேரரசு இயக்கத்தில் உருவான பழனி என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

காஜல் அகர்வால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து இந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இந்நிலையில் நடிகை காஜல் கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், தான்  கர்ப்பமாக  உள்ளதால் சமீபத்தில் தான் ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம்  சமீபகாலமாக இந்தியாவின் பல திரை பிரபலங்களுக்கு “கோல்டன் விசா”  விருது வழங்கி கௌரவித்து  வருகிறது. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா விருது வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.

Kaajal