நைட் பார்ட்டி! வருங்கால கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால்! வைரல் புகைப்படம்.
நைட் பார்ட்டி! வருங்கால கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால்! வைரல் புகைப்படம்.

தனது வருங்கால கணவருடன் பிரபல நடிகை காஜல் அகர்வால் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் பெரும்பாலான உச்ச நடிகர்களின் படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் உள்ளார் நடிகை காஜல் அகர்வால்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவருக்கு இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.
இந்நிலையில் தற்போது 35 வயதாகும் நடிகை காஜல் அகர்வால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாத நிலையில் தற்போது தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அதற்கான திருமண தேதியையும் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தார்.
அதன்படி மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவருடன் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில், நைட் பார்ட்டி ஒன்றில் நடிகை காஜல் அகர்வால் தனது வருங்கால கணவரின் மடியில் மிகவும் நெருக்கமாக அமர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் திருமணத்திற்கு முன்பே இவ்வளவு நெருக்கமா என கமெண்ட் செய்துவருகின்றனர்.