கையில் மகனுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த நடிகை காஜல் அகர்வால்... வைரலாகும் புகைப்படம்!!

கையில் மகனுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த நடிகை காஜல் அகர்வால்... வைரலாகும் புகைப்படம்!!


Actress Kajal Agarwal carry her son in thirupathi temple

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த காஜல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் காஜல் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது நீண்ட கால நண்பரான தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் என பெயர் வைத்தனர். திருமணமாகி குழந்தை பிறந்த பிறகும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 

Thirupathi temple

இந்நிலையில் காஜல் தனது மகன் நீல்லுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதிக்கு சென்றுள்ளார். அங்கு மகனை கையில் ஏந்தியவாறு சாமி தரிசனம் செய்துள்ளார் காஜல். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.