சினிமா

கர்ப்பமான நிலையில் தனது வயிற்றைக் காட்டி புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! வாழ்த்தும் ரசிகர்கள்!!

Summary:

கர்ப்பமான நிலையில் தனது வயிற்றைக் காட்டி புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! வாழ்த்தும் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் பெருமளவில் படிக்காத ஒரு சாதாரண குடும்பத் தலைவியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி,ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ஹீரோயின் பாக்கியலட்சுமியின் தோழியாக, அவரது கணவர் கோபியின் முன்னாள் காதலியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஜெனிஃபர்.

இவருக்கு இத்தொடரில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் வரவர தொடரில் அவரது கதாபாத்திரம் நெகட்டிவ்வாக மாறியதாலும், தான் கர்ப்பமாக இருந்ததாலும் தொடர்ந்து நடிக்க முடியாததால் ராதிகா பாக்கியலட்சுமி  தொடரிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகினார். அதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் புகழ் ரேஷ்மா பசுபுலேடி ராதிகாவாக நடித்து வருகிறார். 

இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஜெனிபர் தனது கர்ப்பகால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இந்நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் தனது வயிற்றை காட்டி கண்ணாடி முன்பு நின்று புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
 


Advertisement