சினிமா

அம்மாடியோவ்.. என்னா ஆட்டம்! தன் சீமந்த நிகழ்ச்சியில் செம்ம குத்தட்டாட்டம் போட்ட பிரபல நடிகை! இந்த வீடியோவை பார்த்தீங்களா!!

Summary:

அம்மாடியோவ்.. என்னா ஆட்டம்! தன் சீமந்த நிகழ்ச்சியில் செம்ம குத்தட்டாட்டம் போட்ட பிரபல நடிகை! இந்த வீடியோவை பார்த்தீங்களா!!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல அதிரடித் திருப்பங்களுடன், சர்ப்ரைஸ்களுடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. படிப்பறிவு குறைந்த, குடும்பத்தை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளும் குடும்பத்தலைவியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு இல்லதரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 

இந்த தொடரில் ஹீரோயின் பாக்கியலட்சுமியின் தோழியாக, அவரது கணவர் கோபியின் முன்னாள் காதலியாக நடித்து வந்தவர் ஜெனிஃபர். இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் கர்ப்பக்காலத்தில்
போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் அவருக்கு அண்மையில் அவரது வீட்டில் மிகவும்எளிமையாக சீமந்த நிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஜெனிஃபர் தனது  கணவருடன் செம குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Advertisement