வாவ்.. செம கியூட் ஜோடி.! நடிகை ஜனனி ஐயருக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு.! மாப்பிள்ளை யாருனு பார்த்தீங்களா!!



actress-janani-iyer-engagement-photos-viral

தமிழ் சினிமாவில் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த தெகிடி என்ற படத்தில் நடித்தன் மூலம் பிரபலமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஜனனி ஐயர். இவர் தொடர்ந்து அவன் இவன், அதே கண்கள், பலூன், தர்மபிரபு போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

பிக்பாஸில் ஜனனி

பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி இறுதி வரை சென்றார். மேலும் ஜனனி ஐயர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.


நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு

இந்த நிலையில் தற்போது ஜனனி ஐயருக்கு பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அதாவது ஜனனி, சாய் ரோஷன் ஷாம்  என்பவரை கரம்பிடிக்க உள்ளார். அவர் ஒரு பைலட். ஏர்கிராஃப்ட் இன்ஜினியராகவும் பணியாற்றி வருகிறாராம். இந்நிலையில் அவர்களது அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க: ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்.! தக்க விளக்கமளித்த குட் பேட் அக்லி படக்குழு.!

இதையும் படிங்க: விஜய் டிவி பிரியங்காவிற்கு திடீரென முடிந்த இரண்டாவது திருமணம்.! மாப்பிள்ளை இவர்தான்.. அவரே வெளியிட்ட பதிவு.!