ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்.! தக்க விளக்கமளித்த குட் பேட் அக்லி படக்குழு.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம்தான் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சிம்ரன், பிரியா வாரியார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
மேலும் மைத்ரி மூவி மேக்கர் நிறுவனம் தயாரித்த இப்படம் உலகளவில் 170 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. படத்தில் பல ஹிட்டான பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருந்தது.
நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்
அதில், குட் பேட் அக்லி படத்தில் என் ஜோடி மஞ்ச குருவி', 'இளமை இதோ', 'ஒத்த ரூபாயும் தாரேன்' என்ற மூன்று பாடல்களை தனது அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளனர். அதற்காக ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் இல்லையெனில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: இப்படி மிஸ் பண்ணிட்டாரே.! குட் பேட் அக்லியில் அஜித்துக்கு மகனாக நடிக்க மறுத்த பிரபலமான நடிகர்.! இதுதான் காரணமா??
குட் பேட் அக்லி படக்குழு விளக்கம்
இந்த நிலையில் இளையராஜாவின் இந்த நோட்டீஸ் குறித்து GBU பட தயாரிப்பு குழுவை சேர்ந்த ரவி சங்கர் என்பவர் கூறியதாவது, “படத்தில் நாங்கள் பயன்படுத்திய பாடல்கள் அனைத்திற்கும் அதன் உரிமைகளை வைத்துள்ள இசை நிறுவனங்களிடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம். மேலும் அவர்களிடமிருந்து தடையில்லா சான்றிதழ்களையும் பெற்றுள்ளோம்” என்று விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓ சோனா... குட் பேட் அக்லியில் கியூட்டாக மாஸ் காட்டிய நடிகை சிம்ரன்.! ரசிகர்களுக்காக பகிர்ந்த வீடியோ!!