இப்படி மிஸ் பண்ணிட்டாரே.! குட் பேட் அக்லியில் அஜித்துக்கு மகனாக நடிக்க மறுத்த பிரபலமான நடிகர்.! இதுதான் காரணமா??



actor-naslan-miss-the-chancr-act-as-son-to-ajith-in-goo

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சிம்ரன், பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் வசூலை வாரி இறைத்து வருகிறது.

நடிகர் அஜித்துக்கு மகன்

 

குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு மகனாக கார்த்திகேயா தேவ் நடித்திருந்தார். இவர் கேஜிஎஃப், பிரபாஸின் சலார், எம்பிரான் போன்ற படங்களில் நடித்தவர். ஆனால் முதலில் அஜித்தின் மகனாக நடிக்க இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தேர்வு செய்தது பிரேமலு பட நடிகர் நஸ்லன்தானாம். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம்.

இதையும் படிங்க: ஓ சோனா... குட் பேட் அக்லியில் கியூட்டாக மாஸ் காட்டிய நடிகை சிம்ரன்.! ரசிகர்களுக்காக பகிர்ந்த வீடியோ!!

Good Bad Ugly

மிஸ் செய்த பிரேமலு நடிகர்

 

இதுகுறித்து நடிகர் நஸ்லின் கூறியதாவது, நடிகர் அஜித்துக்கு மகனாக நடிக்க இயக்குனர் என்னை தொடர்பு கொண்டார். அது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால் அப்பொழுது நான் ஆழப்புழா ஜிம்கானா படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். குட் பேட் அக்லி படப்பிடிப்புக்காக நீண்ட நாட்களை ஒதுக்க வேண்டி இருந்ததால் என்னால் நடிக்க முடியவில்லை. இது வருத்தமாகத்தான் உள்ளது என தெரிவித்துள்ளார். 

 

இதையும் படிங்க: அஜித்தின் குட் பேட் அக்லிக்கு வந்த சோதனை.! படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ்!!