வாவ்.. அடுத்த ஹீரோயின் ரெடி.! அழகில் அம்மாவையே மிஞ்சிய நடிகை கௌதமியின் மகள்.! வர்ணிக்கும் ரசிகர்கள்!!

வாவ்.. அடுத்த ஹீரோயின் ரெடி.! அழகில் அம்மாவையே மிஞ்சிய நடிகை கௌதமியின் மகள்.! வர்ணிக்கும் ரசிகர்கள்!!


actress-gowthami-daughter-photo-viral

தமிழ் சினிமாவில் கடந்த 1988 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த குருசிஷ்யன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கெளதமி. தொடர்ந்து அவர் கமல், பிரபு, சத்யராஜ் என பல பிரபலங்களுடன் இணைந்து எக்கசக்கமான படங்களில் நடித்து மக்கள் மத்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

கௌதமி இறுதியாக கமல்ஹாசனுடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடித்திருந்தார். அவர் கடந்த 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1999 ஆம் ஆண்டு பிரிந்தனர். அவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.

பின்னர் கௌதமி நடிகர் கமலுடன் 10 வருடங்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தார். பின்னர் சில பிரச்சினைகளால் அவர்களும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் கௌதமி தற்போது தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். கௌதமியின் மகள் சுப்புலட்சுமி தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தநிலையில் அது வைரலாகி வருகிறது. அதனை கண்ட நெட்டிசன்கள் கெளதமியின் மகள் அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.