சினிமா

நடிகை கவுதமி செய்த ஒற்றை காரியம்! தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்! என்ன செய்தார் தெரியுமா?

Summary:

Actress gowthami celebrated new year with sweepers in chennai

தமிழ் சினிமவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கவுதமி. ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சினிமாவில் பிரபலமாக இருந்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு புற்றுநோயில் இருந்து வெளியேறியுள்ளார்.

தற்போது Life Again என்னும் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்திவரும் கவுதமி புற்றுநோய் சிகிச்சை, வாழ்க்கையின் முக்கியத்துவம், தன்னம்பிக்கை, மன உறுதி, புற்று நோயை எதிர்த்து போராடும் மன வலிமை உள்ளிட்டவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில் பிறந்திருக்கும் 2020 ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் துப்புரவு தொழிலாளர்களுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் நடிகை கவுதமி. மேலும் இந்த புத்தாண்டை துப்புரவு தொழிலார்களுடன் கொண்டாடுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கவுதமியின் இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் அதிக பாராட்டு கிடைத்துள்ளது.


Advertisement