பட்டாம்பூச்சி போல கலர்புல்லான உடையில் மிளிரும் பாரதி கண்ணம்மா வெண்பா! கர்ப்பகாலத்தில் எப்படியொரு போட்டோஷூட் பார்த்தீர்களா!!



actress farina pregnant photoshoot viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் அருண் நடிக்கிறார். மேலும் கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோகினி ஆகியோர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.

இந்த தொடரில் டாக்டராக, பாரதியை ஒருதலையாக காதலிக்கும் பயங்கர வில்லி கதாபாத்திரமான வெண்பாவாக பரீனா நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். மேலும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை ஃபரீனா கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ஃபரீனா தற்போது  கர்ப்பமாக உள்ளார்.

இந்த நிலையில் பரீனா அவ்வப்போது வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது வண்ணத்துப்பூச்சி போன்று கலக்கலான உடையணிந்து புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.