சினிமா

அட.. என்னம்மா இது! கர்ப்பமாக இருக்கும் பாரதி கண்ணம்மா வெண்பா செய்த காரியத்தை பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படங்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக சென்று ரசிகர்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக சென்று ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாரதி கண்ணம்மா. 
இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத், கண்ணம்மா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக ரோஷினி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும் இத்தொடரில் பயங்கர வில்லியாக, வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்து வருபவர் பரினா ஆசாத். ஆரம்ப காலகட்டத்தில் தொகுப்பாளினியாக இருந்த அவர் இதற்கு முன் சில தொடர்களில் நடித்துள்ளார். மிரட்டலான வில்லியாக நடித்திருந்தாலும் பாரதிகண்ணம்மா தொடரில் இவரது நடிப்பு பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.

பரினா தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதனை அவர் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் அவர் தனது வயிற்றில் மருதாணி போட்டு எடுத்த போட்டோசூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் பலரும் கலவையான விமர்சனங்களையே அளித்து வருகின்றனர்.


Advertisement