சினிமா

இவங்கதான் நடிகை எமி ஜாக்சன் அம்மாவா..! எம்புட்டு அழகு.. நீங்க பாத்துடீங்களா..? வைரலாகும் புகைப்படம்..

Summary:

நடிகை எமி ஜாக்சன் குழந்தை பருவத்தில் அவரது அம்மாவுடன் உள்ள கியூட் புகைப்படம்.

நடிகை எமி ஜாக்சன் குழந்தை பருவத்தில் அவரது அம்மாவுடன் உள்ள கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் .

பிரபல தமிழ் இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். பின்னர் தனுஷ், விக்ரம், விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடயே மாபெரும் வரவேற்பை பெற்றார். மேலும் ரஜினியின் எந்திரன் 2.0 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

பின்னர் லண்டனை  சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்த இவருக்கு சமீபத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்தது.

 சினிமா, குடும்பம் என ஒருபுறம் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாகவும் உள்ளார். இன்று அவரது இன்ஸ்டாராகிராம்மில் பக்கத்தில் குழந்தை பருவத்தில் அவரது அம்மாவுடன் உள்ள அறிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் பெற்று வருகிறது.

 


Advertisement