கல்யாணம் பண்ணாம கர்ப்பமாகலாம்., வயசு அந்த விஷயத்திற்கு தடையில்லை.. தடுக்க முடியாது - பிரபல நடிகை தபு ஓபன்டாக்..! பேட்டியால் புதிய சர்ச்சை..!!

கல்யாணம் பண்ணாம கர்ப்பமாகலாம்., வயசு அந்த விஷயத்திற்கு தடையில்லை.. தடுக்க முடியாது - பிரபல நடிகை தபு ஓபன்டாக்..! பேட்டியால் புதிய சர்ச்சை..!!


actress-dhabu-speech

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தபு. இவருக்கு வயது 50 ஆகிறது. ஆனால் இதுவரையிலும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துவரும் தபு, தமிழில் இருவர், காதல் தேசம், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் தபு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, "எனக்கும் அனைவரையும் போல தாயாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

Actress Dhabu

திருமணமாகாமலே கர்ப்பமாகலாம். வாடகை தாய் மூலமாகவும் தாயாகும் வாய்ப்புள்ளது. எனக்கு தாயாக வேண்டும் என்ற எண்ணம் வந்தால், அந்த முறையை நான் கடைபிடிப்பேன். என்னை யாராலும் தடுக்க முடியாது. திருமணமாகாவிட்டால் செத்தெல்லாம் போகமாட்டோம். திருமணம் அவசியமில்லை. 

எனது நடிப்புத் தொழிலில் கிடைக்கும் மகிழ்ச்சியை நான் அனுபவித்து வருகிறேன். காதலுக்கும், திருமணத்திற்கும் வயது சம்பந்தமில்லை. திருமணத்திற்கும், குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கும் வயது சம்பந்தமில்லை. இக்காலத்தில் எதற்கும் வயது ஒரு தடையல்ல" என்றார். இந்த கருத்து இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.