கடைசி ஆப்ஷன்.! கிளிக் செய்தால்.. அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து போட்டுடைத்த தேவிபிரியா!!Actress devipriya open talk about adjustment

வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை நடிகைகள் பலரும் சந்திக்கும் ஒரே பிரச்சினை அட்ஜஸ்ட்மெண்ட். வாய்ப்புக்காக பலரும் அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லைகளை சந்திக்க நேரிடுகிறது. இந்நிலையில் தற்போது வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தாங்கள் சந்தித்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகளை குறித்து ஓப்பனாக பகிர்ந்து வருகின்றனர்.

அட்ஜஸ்ட்ன்ட் பிரச்சினை 

இந்நிலையில் தற்போது சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகை தேவிபிரியாவும் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு பெங்களூரிலிருந்து ஒரு போன் வந்தது. ஒருவர் மிகவும் டீசண்ட்டாக ஆங்கிலத்திலேயே பேசினார். அவர்  பெங்களூரில் ஒரு நிகழ்ச்சி உள்ளது. உங்களால் வர முடியுமா என கேட்டார்.

இதையும் படிங்க: "படங்களில் கவர்ச்சியாக நடிக்க எனக்கு விருப்பமில்லை" ஆனால் தனுஷ் கூட.. மனம் திறந்து பேசிய நடிகை தன்ஷிகா.!?

devipriya

நடிகை தேவிப்ரியா ஓபன் டாக் 

நான் நிகழ்ச்சி நடக்கும் அன்று வருகிறேன் என கூறினேன். உடனே அவர் நான் நிகழ்ச்சி முடிந்ததும் கிளம்பி விடுவேன். இரவு விருந்தில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என கூறினார். பின் அவரது நோக்கத்தை தெரிந்து கொண்டு, முடியாது என கூறி கட் செய்துவிட்டேன் என கூறியுள்ளார். மேலும் சின்ன சின்ன ரோலில் நடிப்பதற்கு கூட அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

ஆடிஷன் முடிந்த பிறகு கடைசி ஆப்ஷன் அதுதான். கிளிக் செய்தால் ஹீரோயினாக ஜொலிக்க முடியும். இந்த மாதிரி தொல்லையால் தான் பல நடிகைகள் கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாகி விடுகின்றனர். எனக்கு இது போன்ற பிரச்சினைகள் வந்ததில்லை. அப்படி யாராவது என்னை அணுகினால் அதில் நான் நடிக்கமாட்டேன் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: "என் மூஞ்சி நல்லா இல்லன்னு கண்ணாடி கூட பாக்க மாட்டேன்" இயக்குனர் செல்வராகவனின் மனம் வருந்திய பேட்டி..