தீபிகா படுகோனே வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்துபோன போன ரசிகர்கள்! பாருங்கள் புரியும்!



Actress deepika padukone latest photo

ஹிந்தி சினிமா மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது, அதே சமயம் ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார் தீபிகா.

பாலிவுட் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் தமிழ் மக்களிடமும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. நடிகர் ரஜினிக்கு ஜோடியாக அனிமேஷன் படமான கோச்சடையான் படத்திலும் நடித்திருந்தார் தீபிகா.

deepika padukone

இந்நிலையில் இன்று காலை ஒரு புதிய படத்தை டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார், அதைப்பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம், அந்த புகைப்படத்தில் 
தீபிகாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது போல் காட்சியளித்தார் தீபிகா. ஆனால் அந்த புகைப்படம் ஒரு படத்திற்காக எடுத்துள்ளார்.

லக்ஷமி அகர்வால் என்பவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் தீபிகா நடிக்க இருக்கிறாராம். அவர் ஒரு நபரால் ஆசிட் தாக்குதலுக்கு ஆளானவர், அப்போதில் இருந்து இதுபோன்ற மோசமான விஷயத்திற்கு பயங்கரமாக குரல் கொடுத்து வருபவர்.

அவரை பற்றிய கதையில் தான் தீபிகா நடிக்கிறாராம், அப்படத்திற்கான ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டு என் சினிமா பயணத்தில் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம் என பதிவு செய்துள்ளார்.