சினிமா

அடி தூள்... இந்த வயசுலையும் இப்படி ஒரு திறமையா! பூமிக்காவின் வைரல் வீடியோ....

Summary:

நடிகை பூமிக்காவின்  வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பூமிக்காவின்  வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பூமிகா சாவ்லா. அதன்பின்னர் பத்ரி, ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூமிகா சாவ்லா. தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் அவர் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். 

இந்த நிலையில் நடிகை பூமிகா பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆனாலும் இன்றும் மவுசு குறையாத அவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் அண்ணி மற்றும் அக்கா என்று துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது அவரது கவனம் வெப்சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளது.

மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது வளையம் வைத்து இடுப்பில் சுத்தும் வீடியோ ஒற்றை வெளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ்ஸை பெற்று வருகிறது.

 

 

 


Advertisement