அடக்கடவுளே.. கணவர் இறந்த பின் நடிகை பானுப்ரியாவிற்கு இப்படியொரு பிரச்சினையா?? கலங்கிய நடிகை.! வருத்தத்தில் ரசிகர்கள்!!

அடக்கடவுளே.. கணவர் இறந்த பின் நடிகை பானுப்ரியாவிற்கு இப்படியொரு பிரச்சினையா?? கலங்கிய நடிகை.! வருத்தத்தில் ரசிகர்கள்!!


actress-banupriya-loss-his-memory-power-after-her-husba

தமிழ் சினிமாவில் 80,90ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பானுப்பிரியா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் சிறந்து விளங்கிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

நடிகை பானுப்பிரியா இறுதியாக தமிழில் கடைக்குட்டி சிங்கம் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்திருந்தார். நடிகை பானுப்ரியா 1988 ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுசல் என்பவரை மணந்தார். இந்த தம்பதியினருக்கு அபிநயா என்ற மகள் உள்ளார்.  தற்போது பட வாய்ப்புகள் இன்றி இருக்கும் நடிகை பானுப்பிரியா தனது கணவரின் மறைவு குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் அண்மையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

banupriya

அவர் கூறியதாவது, 2 வருடங்களுக்கு முன்பு எனது கணவர் இறந்தார். அதன் பின்னர் எனக்கு நினைவாற்றல் மிகவும் குறைந்துவிட்டது. அதிக மறதி ஏற்படுகிறது. எதையுமே ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. மனசு வெறுமையாகிவிட்டது. ஷூட்டிங்கில் வசனங்கள் கூட மறந்து போய்விட்டது.

நான் கணவனை விவாகரத்து செய்ததாக பல செய்திகள் பரவியது. அது உண்மை இல்லை. தற்போது எனது கணவர் உயிரோடு இல்லாததால் நான் அதுகுறித்து பேச விரும்பவில்லை. மேலும் என் உடல்நலம் குறித்தும் வதந்திகள் பரவியது. நான் நலமாகதான் உள்ளேன். தனது மகள் அபிநயா லண்டனில் படித்து வருவதாகவும், தற்போது தான் வீட்டிலேயே புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது, வீட்டு வேலைகள் செய்வது என தன்னை பிசியாக வைத்துக் கொள்வதாகவும்  நடிகை பானுப்ரியா கூறியுள்ளார்.