ஆஹா..! வில்லு போல் வளையும் உடம்பு..! திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் அதுல்யாவின் உடற்பயிற்சி வீடியோ.Actress Atulya Ravi Gym workout video goes viral

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் நடிகை அதுல்யா ரவி. சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார்.

காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனா இவர் அதனைத் தொடர்ந்து கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Atulya ravi

மேலும் அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுல்யா ரவி. தற்போது வட்டம் என்ற படத்தில் நடித்து வரும் அதுல்யா ரவி அடுத்ததாக சாந்தனு நடிப்பில் உருவாக இருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சினிமாவில் எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதுல்யா ரவி.

அந்த வீடியோ காட்சியில் பயிற்சியாளரின் உதவியுடன் தனது உடலை வில்லுபோல் வளைத்து கையை ஊன்றி தலைகீழாக நிற்கிறார் அதுல்யா ரவி. சில வினாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சி அவரது ரசிகர்களை வியக்க வைப்பதாக உள்ளது.