என்ன கொடுமை இது.. நயன்தாராவின் கெட்டப்பில், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல நடிகை..! யார் தெரியுமா?.!



Actress Arthi on Nayanthara Marriage Getup

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. 

இவர்களது திருமணத்திற்காக ஒட்டுமொத்த ஹோட்டலையே கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு வாடகை எடுத்துள்ளனர். திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் கேமரா, செல்போன் என எதிலும் புகைப்படம் எடுக்ககூடாது என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இவர்களது திருமணத்திற்கு தமிழ் பிரபலங்களை தாண்டி பாலிவுட் பிரபலங்களும் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆகா திருமணம் என்ற திருமண நிகழ்வு நடக்கிறது. அதில் நடிகை ஆரத்தி நயன்தாராவின் திருமண உடை லுக்கில் இருக்கிறார். அந்த புகைப்படத்தை ஷேர் செய்த அவர், என்ன கொடுமை இது என்று ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார்.